/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தலைவிரித்தாடும் குப்பை பிரச்னை; ஒப்பந்த நிறுவனம் மீது கவுன்சிலர்கள் புகார்
/
தலைவிரித்தாடும் குப்பை பிரச்னை; ஒப்பந்த நிறுவனம் மீது கவுன்சிலர்கள் புகார்
தலைவிரித்தாடும் குப்பை பிரச்னை; ஒப்பந்த நிறுவனம் மீது கவுன்சிலர்கள் புகார்
தலைவிரித்தாடும் குப்பை பிரச்னை; ஒப்பந்த நிறுவனம் மீது கவுன்சிலர்கள் புகார்
ADDED : டிச 24, 2025 06:13 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டல கூட்டம் தலைவர் கோவிந்தராஜ், தலைமையில் உதவி கமிஷனர் பாரிஜான், முன்னிலையில் நடைபெற்றது.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
புஷ்பலதா (அ.தி.மு.க.): மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தவே தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்து இருந்தோம். ஆனால் அந்நிறுவனம் குப்பைகளை தரம் பிரிக்காமல் பாறைக்குழியில் கொட்டி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் நிறுவனத்தை முன்பே மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. ஒப்பந்த நிறுவனத்தினர், குப்பை அள்ள போதிய ஆட்களை தருவதில்லை. பணியும் சரியில்லை. எனவே, எனது வார்டில் குப்பை எடுக்க அவர்கள் தேவையில்லை. நாங்களே ஆட்கள் வைத்து குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தி கொள்கிறோம்.
ராஜேந்திரன் (இ.கம்யூ): குப்பை எடுக்க சரியாக ஆட்கள் வருவதில்லை. வீதி முழுவதும் குப்பை. என்னால் வார்டுக்குள் செல்ல முடியவில்லை. பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டு மறிக்கின்றனர். அவ்வப்போது தீயும் வைத்து விடுகின்றனர். குப்பை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
மண்டல தலைவர்: அந்தந்த வார்டுகளில் குப்பைகளை தரம் பிரிக்கிறோம். குப்பைகளை தரம் பிரிப்பதை அனைத்து அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். சில நாட்களில் குப்பை பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும்.
முத்துசாமி (அ.தி.மு.க.): குப்பை கொட்டக்கூடாத இடங்களில் குப்பை போடுவதை தவிர்க்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
செழியன் (த.மா.கா.): குப்பை பிரச்னை குறித்து, 3 ஆண்டுக்கு முன்பே எச்சரித்தோம். குப்பையை பிரித்து கொடுக்க பொது மக்கள் தயார். அதனை வாங்க நாம் தயாராக இல்லை. குப்பை எடுக்க போதிய ஆட்கள் வருவதில்லை.
குமார் (ம.தி.மு.க.): குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதில் தீவிரம் காட்ட வேண்டும். குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறையே வருகின்றது.
கவிதா (அ.தி.மு.க.) : நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை.
இந்திராணி (அ.தி.மு.க.): கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய சுகாதார பணியாளர்கள், 20 நாய்களை பிடித்து சென்றால், திருப்பி, 40 நாய்களை கொண்டு வந்து விடுகின்றனர். குப்பையில் வைக்கப்படும் தீயால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்ச்செல்வி (அ.தி.மு.க.): குப்பை எடுக்க போதிய ஆட்கள் வருவதில்லை. நேற்று (நேற்று முன்தினம்) எனது வார்டில், 13 பேர் விடுப்பு எடுத்து கொண்டனர். இப்படி ஆட்கள் பற்றாகுறை ஏற்பட்டால், எப்படி குப்பையை பிரித்து வாங்குவது.
உதவி கமிஷனர்: பனியன் கம்பெனி குப்பையை ரோட்டில் போடுகின்றனர். கண்டு பிடித்து குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருகிறோம். கவுன்சாலர்களுடைய ஒத்துழைப்பு வேண்டும்.
கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய சுகாதார பணியாளர்கள், 20 நாய்களை பிடித்து சென்றால், திருப்பி, 40 நாய்களை கொண்டு வந்து விடுகின்றனர். குப்பையில் வைக்கப்படும் தீயால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

