ADDED : மார் 27, 2024 01:24 AM

பா.ஜ.,வில், கம்யூ., கவுன்சிலர் கணவர்
திருமுருகன்பூண்டி நகராட்சி, 22வது வார்டு கவுன்சிலரின் கணவர் பா.ஜ.,வில் இணைந்தார். திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரின் மனைவி, பார்வதி என்பவர், மா.கம்யூ., கட்சியின், 22வது வார்டு கவுன்சிலர். நேற்று முன்தினம் நீலகிரி லோக்சபா பா.ஜ., வேட்பாளர் முருகன், திருமுருகன்பூண்டியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில், அப்போது, முருகன் மற்றும் பா.ஜ.,நிர்வாகிகள் முன்னிலையில், கம்யூ., கவுன்சிலர் பார்வதியின் கணவர் சிவகுமார் பா.ஜ.,வில் இணைந்தார்.
பா.ஜ., வாகன பிரசாரம் துவக்கம் (படம்)
திருப்பூர் மாநகர வீதிகளில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக வாகன பிரசாரம் துவங்கியது. திருப்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக முருகானந்தம், போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, வாகன பிரசாரம் துவங்கியது. திருப்பூர், கொங்கு நகர் ரோடு, ஊத்துக்குளி ரோட்டில், அவருக்கு ஆதரவாக, வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், மத்திய அரசின் திட்டங்க்ள, தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடுகள் குறித்து விளக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர வீதிகளில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக வாகன பிரசாரம் துவங்கியது. திருப்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக முருகானந்தம், போட்டி யிடுகிறார். அவருக்கு ஆதரவாக, வாகன பிரசாரம் துவங்கியது. திருப்பூர், கொங்கு நகர் ரோடு, ஊத்துக்குளி ரோட்டில், அவருக்கு ஆதரவாக, வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், மத்திய அரசின் திட்டங்கள், தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடுகள் குறித்து விளக்கப்பட்டது.

