/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கடல் அரிப்பில் மீனவர் வலைக்கூடம் சேதம்
/
கடல் அரிப்பில் மீனவர் வலைக்கூடம் சேதம்
ADDED : நவ 01, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி : திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் அரிப்பு மற்றும் மீன்பிடி தளம் இல்லாத பகுதிகளில் கடல் நீர் நிலப்பரப்பிற்குள் வந்து கட்டடங்களை சேதப்படுத்துகிறது.
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் மீனவர்கள் வலைகளை பின்னுவதற்காக 2020ல் ரூ. 12 லட்சத்தில் கட்டப்பட்ட மீன்வலைக்கூடம் கடல் அரிப்பில் சேதம் அடைந்து வருகிறது. கடல் நீரும் அப்பகுதியில் கட்டடத்தை கடந்து கரைக்குள் வந்து விட்டது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

