/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
காதல் தகராறில் கத்திக்குத்து படுகாயமடைந்த நபரும் பலி
/
காதல் தகராறில் கத்திக்குத்து படுகாயமடைந்த நபரும் பலி
காதல் தகராறில் கத்திக்குத்து படுகாயமடைந்த நபரும் பலி
காதல் தகராறில் கத்திக்குத்து படுகாயமடைந்த நபரும் பலி
ADDED : ஆக 01, 2025 09:52 PM
திருவாரூர்:காதல் தகராறில் சமரசம் பேசிய கோர்ட் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த மற்றொருவரும் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
திருவாரூர் மாவட்டம், பாண்டுக்குடியை சேர்ந்தவர் சாகுல்அமீது. இவரது மகன் முகமதுஆதாம், 25. இவரும், புலிவலத்தை சேர்ந்த சவுமியா, 22 என்பவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன், முகமதுஆதாம், தென்காசி மாவட்டம், பறையடி சென்றார்.
அங்கு சென்ற பின், இருவரும் மொபைல் போனில் பேசி வந்தனர். சில நாட்களாக, முகமது ஆதாம் அழைப்பை சவுமியா ஏற்கவில்லை.
ஜூலை, 28ல் புலி வலத்தில் உள்ள சவுமியா வீட்டிற்கு, உறவினர்கள் முகமதுரசூல், 21, ஹாஜிமுகமது, 23, ஆகியோருடன், முகமதுஆதாம் வந்துள்ளார்.
அப்போது, சவுமியாவின் தம்பி கோபிகிருஷ்ணனுக்கும், முகமது ஆதாம் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவாரூர் செஷன்ஸ் கோர்ட் அலுவலக உதவியாளர் சந்தோஷ்குமார், 27, தன் நண்பரை பார்க்க சென்ற இடத்தில், இந்த தகராறு நடக்க, அதே ஊரை சேர்ந்த தச்சுத்தொழிலாளி தட்சணாமூர்த்தி, 34, என்பவருடன் சேர்ந்து, வாக்குவாதம் செய்தவர்களை சமரசப்படுத்த முயன்றார்.
அப்போது முகமது ஆதாம், அவர்கள் இருவரையும் கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தட்சணாமூர்த்தி, மதுரை அரசு மருத்துவ மனையில் நேற்று முன் தினம் இரவு இறந்தார்.
இரட்டை கொலை தொடர்பாக, திருவாரூர் தாலுகா போலீசார், முகமது ஆதாம் உட்பட மூவரையும் கைது செய்தனர்.