/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
வாகனங்கள் மீது தாக்குதல் போதை நபர்கள் சிக்கினர்
/
வாகனங்கள் மீது தாக்குதல் போதை நபர்கள் சிக்கினர்
ADDED : ஆக 28, 2025 02:02 AM

வலங்கைமான்:டூ - வீலர்கள், கார்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய, ஐந்து வாலிபர்களை நேற்று, போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் - கும்பகோணம் பைபாஸ் சாலை, நல்லுார் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, வாலிபர்கள் ஐந்து பேர் குடிபோதையில், கார்கள், டூ - வீலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அவை சேதமடைந்தன.
பாதிக்கப்பட்டவர்கள், அவசர போலீஸ் எண் 100க்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு, நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், வெங்காயகளங்சேரி வசந்தகுமார், 24, மற்றும் மணக்குண்டு, விஜய், 19, என்பதும், கல்வீசி தாக்குதல் நடத்தியதும் தெரிந்தது.
அவர்களின் தகவலில், மணக்குண்டு எழிலரசன், 18, சாலபோகம் கிராமத்தைச் சேர்ந்த ராமன், 18, சபரி, 18, ஆகிய ஐவரையும், போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.