/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்த வட்டார கல்வி அலுவலகம் அகற்றப்படுமா?
/
பாழடைந்த வட்டார கல்வி அலுவலகம் அகற்றப்படுமா?
ADDED : மார் 08, 2024 09:15 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில், துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி என மொத்தம், 94 ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 280 இருபால் ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான, தலைமை அலுவலகமான, வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் தற்போது திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் எதிரே உள்ள அரசு மாதிரி துவக்கப் பள்ளி வளாகத்தில் தற்போது இயங்குகிறது.
இந்நிலையில், இந்த அலுவலகம் முன், செயல்பட்டு வந்த கட்டடம், தற்போது வேளாண் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் உள்ளது. 50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம் பலமிழந்து, மரங்களின் வேர்கள் கட்டடத்திற்குள் புகுந்து சேதப்படுத்துவதால் சில பகுதிகள் உடைந்து விழுந்து வருகின்றன.
இதனால் வேளாண் அலுவலகத்திற்கு வரும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், பழுதடைந்த பழைய வட்டார கல்வி அலுவலக கட்டடத்தை அகற்ற வேண்டும் என, அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

