/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
கால்நடை துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : நவ 27, 2025 04:07 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், இரண்டாம் கட்டமாக 25 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ், இளைஞர்களின் சுயதொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கும் முன்னெடுத்து வருகிறது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சி திட்டம். கடந்த நவ., 7 - 29ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. திருவள்ளூரில் இரண்டாம் கட்டமாக, 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமும், 2 அமர்வு களாக பால் சார்ந்த பொருட்கள், அகர்பத்தி, பஞ்சகவ்யா மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகிய தலைப்புகளில் பயிற்சி பெற்றனர்.
மேலும், தேவந்தவாக்கத்தில் உள்ள கோகுல் கிருஷ்ணா கோசாலா பண்ணைக்கும், பயிற்சியாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மருத்துவர் ஜெயந்தி, துணை இயக்குநர் மணிமாறன் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

