/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறந்த எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி
/
சிறந்த எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி
ADDED : நவ 27, 2025 04:07 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாசாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் உருவாக்கப்பட்டது.
இச்சங்கம் மூலம், 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து, அவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயாக நிதியுதவியை உயர்த்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், இதற்கான விண்ணப்பங்களை திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பித்தை பூர்த்தி செய்து, தங்கள் படைப்பை இரு நகல்களில் 'டிஜிட்டல்' முறையில், உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, டிச., 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

