/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில் முனைவோருக்கு ரூ.4.78 கோடி கடன் ஆணை
/
தொழில் முனைவோருக்கு ரூ.4.78 கோடி கடன் ஆணை
ADDED : டிச 24, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: தமிழகத்தைச் சேர்ந்த மகளிர் மற்றும் திருநங்கையரை தொழில் முனைவோராக்க, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கடன் வசதியாக்கல் முகாம் நடந்தது.
முகாமில், 66 தொழில் முனைவோர்களுக்கு, 4.78 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஆணையை, கலெக்டர் பிரதாப் வழங்கினார்.

