/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செடிகளால் சூழ்ந்த மழை மானி மையம் அளவீடு செய்ய ஊழியர்கள் சிரமம்
/
செடிகளால் சூழ்ந்த மழை மானி மையம் அளவீடு செய்ய ஊழியர்கள் சிரமம்
செடிகளால் சூழ்ந்த மழை மானி மையம் அளவீடு செய்ய ஊழியர்கள் சிரமம்
செடிகளால் சூழ்ந்த மழை மானி மையம் அளவீடு செய்ய ஊழியர்கள் சிரமம்
ADDED : நவ 27, 2025 03:43 AM

திருவள்ளூர்: பூண்டியில் மழை மானி மையத்தைச் சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளதால், ஊழியர்கள் மழையளவீடு செய்ய சிரமப்படுகின்றனர்.
பூண்டி நீர்தேக்கத்தில், நீர்வளத்துறை அலுவலகம் அருகே மழை மானி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில், அப்பகுதியில் பெய்யும் மழை அளவை கண்டறிந்து, நீர்த்தேக்கத்திற்கு வரும் மழைநீர் கணக்கீடு செய்யப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மழை மானி மையத்தைச் சுற்றிலும், இரும்பு வேலி அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இந்நிலையில், மழைமானி மையத்தின் வேலியைச் சுற்றிலும், மையத்திற்குள்ளும் செடிகள் வளர்ந்துள்ளது.
சுற்றிலும் வனப்பகுதியாக இருப்பதால், விஷ பூச்சிகள் தங்கும் இடமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, மழை அளவை கணக்கீடு செய்ய, நீர்வளத்துறை ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, நீர்வளத்துறையினர், மழைமானி மையத்தைச் சுற்றிலும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, பராமரிக்க வேண்டும் என, ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.