/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கன்டெய்னர் லாரி மோதி வடமாநில தொழிலாளி பலி
/
கன்டெய்னர் லாரி மோதி வடமாநில தொழிலாளி பலி
ADDED : நவ 27, 2025 03:44 AM
மீஞ்சூர்: கன்டெய்னர் லாரியை பின்நோக்கி இயக்கும் போது, வடமாநில தொழிலாளி மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பீஹார் மாநிலம், நாளந்தா பகுதியைச் சேர்ந்தவர் முன்னிலால் சவுத்ரி, 40. இவர், மீஞ்சூர் அடுத்த செப்பாக்கம் கிராமத்தில், தனியார் கன்டெய்னர் கிடங்கில், லோடு ஏற்றும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணியில் இருந்த போது, கன்டெய்னர் லாரியை பின்நோக்கி இயக்கும்போது, முன்னிலால் சவுத்ரி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முன்னிலால் சவுத்ரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

