/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 07, 2024 11:20 PM

திருத்தணி ஒன்றிய அலுவலகம் அருகில், பழைய தர்மராஜா கோவில் செல்லும் சாலையில், திருமண மண்டபங்கள், கால்நடை உதவி இயக்குனர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாசில்தார் குடியிருப்பு உள்ளிட்டவைஉள்ளன.
இதனால், இச்சாலை வழியாக தினமும் ஏராளமானோர் நடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும்.
இந்நிலையில், வரலட்சுமி ராமராவ் திருமண மண்டபம் எதிரே உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்று அல்லது மழை பெய்தால் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மதுசூதன ராவ், திருத்தணி.