/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புழுதி பறக்கும் நெடுஞ்சாலை பேரம்பாக்கத்தில் அவஸ்தை
/
புழுதி பறக்கும் நெடுஞ்சாலை பேரம்பாக்கத்தில் அவஸ்தை
புழுதி பறக்கும் நெடுஞ்சாலை பேரம்பாக்கத்தில் அவஸ்தை
புழுதி பறக்கும் நெடுஞ்சாலை பேரம்பாக்கத்தில் அவஸ்தை
ADDED : ஆக 31, 2025 02:35 AM

பேரம்பாக்கம்:பேரம்பாக்கம் குவாரியில் இருந்து எடுத்து செல்லும் மண், சாலையில் சிதறி புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிமக்கள் கடும் அவதிப் பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் பகுதியில், 10 நாட்களுக்கு முன், அரசு உத்தரவுப்படி ஏரியில் இருந்து சவுடு மண் அள்ளும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அள்ளப்படும் சவுடு மண், சென்னை உட்பட பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த லாரிகள் பெரும்பாலும் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், மண் சாலையில் சிதறி வாக னங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதனால், இச்சாலை வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர், சுவாசக் கோளாறு ஏற்பட்டு கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் சவுடு மண் லாரிகளை தார்ப்பாய் கொண்டு மூட அறிவுறுத்த வேண்டும். மேலும், நெடுஞ்சாலையில் தண்ணீர் தெளித்து, புழுதி பறக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.