ADDED : செப் 07, 2025 03:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பழனிசெட்டிபட்டி இந்து நாடார் உறவின் முறை ஆர்.எஸ்., மெட்ரிக்பள்ளி மாணவர்கள் ஒரே நிமிடத்தில் நடனம், பாட்டு, ஓவியம், கராத்தே அபாகஷ், யோகா, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்டவற்றை செய்தனர்.
இதனை 'டிவைன் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டில்' உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. அந்த அமைப்பின் தலைவர் கிருத்திகா தேவி சாதனை தொடர்பான சான்றிதழை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினார். விழாவில் பள்ளி நிறுவனத்தலைவர் சங்கரநாராயணன், செயலாளர் ராஜேந்திரபிரசாத், பொருளாளர் பாண்டி, உறவின்முறை தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் காந்திராஜன், பொருளாளர் இளங்கோவன், ஜவஹர்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.