/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை குடிநீர் இன்றி உவர்ப்பு நீரை பருகுவதால் பாதிப்பு ஏ.வாடிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் அவதி
/
வைகை குடிநீர் இன்றி உவர்ப்பு நீரை பருகுவதால் பாதிப்பு ஏ.வாடிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் அவதி
வைகை குடிநீர் இன்றி உவர்ப்பு நீரை பருகுவதால் பாதிப்பு ஏ.வாடிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் அவதி
வைகை குடிநீர் இன்றி உவர்ப்பு நீரை பருகுவதால் பாதிப்பு ஏ.வாடிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் அவதி
ADDED : செப் 07, 2025 03:32 AM

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், ஏ.வாடிப்பட்டி ஊராட்சியில் வைகை கூட்டு குடிநீர் திட்டம் இல்லாததால் உவர்ப்பு நீரை பருகி கல்லடைப்பு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
ஏ.வாடிப்பட்டி ஊராட்சியில் ரெங்கநாதபுரம், புதூர், மேல வாடிப்பட்டி, இந்திரா நகர், வேலாயுதபுரம், வெங்கட்ராமபுரம் ஆகிய உட்கடை கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு 9 வார்டுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவு நீர் செல்ல முறையான சாக்கடை வசதி, சுத்தமான குடிநீர் வினியோகம், போதிய தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிப்படை வசதிகள் நிறைவேற்ற ஊராட்சியில் பல முறை வலியுறுத்தினாலும் பிரச்னை தீர வில்லை என மக்கள் சலித்து கொள்கின்றனர்.
கிராம மக்கள் கருத்து:
உவர்ப்பு நீரால் பாதிப்பு சுரேஷ் ஏ.வாடிப்பட்டி: வைகை அணையில் இருந்து வைகை ஆறு எங்கள் ஊரை கடந்து, 300 மீட்டர் தூரத்தில் மதுரை உட்பட பல மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கு செல்கிறது. ஆனால் எங்கள் ஊருக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டம் இல்லை. சட்டசபை, லோக்சபா, மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் என அடுக்கடுக்காக பதவியில் வந்தவர்கள் வைகை குடிநீர் கொண்டு வருவோம் என வாக்குறுதிகளை வீசி சென்றனர். மக்களுக்கும் நாளை, நாளை என நம்பிக்கையோடு காத்திருந்தும் எந்த பயனும் இல்லை. இதனால் உவர்ப்பு நீரை குடிப்பதால் பலரும் கல்லடைப்பால் அவதிப்படுகின்றனர். அனைவராலும் பணம் கொடுத்து குடிநீரை விலைக்கு வாங்கும் நிலையில் இல்லை. பல முறை கிராம சபை கூட்டங்களில் மக்கள் கோரிக்கை வைத்தும் கூட்டு குடிநீர் திட்டம் வரவில்லை. ஊராட்சிக்கு குடிநீர் தேவையை சமாளிக்க ஆங்காங்கே போர்வெல் அமைத்து, அதுவும் 5 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படுகிறது.
சாக்கடை வசதியின்றி கழிவு நீர் தேக்கம் செல்வராஜ்,ஏ.வாடிப்பட்டி : ஊராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற போர்டுக்கு அருகே ஊரின் நுழைவுப்பகுதியில் வலது, இடதுபுறம் ரோட்டில் கழிவுநீர், போர்வெல் குடிநீர் குழாயை மூழ்கடித்து செல்கிறது. இதனால் சுகாதாரக்கேடு தலைவிரித்தாடுகிறது. ஆண், பெண் சுகாதார வளாகம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர்.தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் அமைக்க வில்லை. ரெங்கநாதபுரத்தில் பெண்கள் சுகாதார வளாகம் தண்ணீர் வசதி யின்றி மூடி கிடக்கிறது.இடிந்து விழும் நிலையில் ஊரக கிராமப்புற நூலகம்.
சேதமடைந்த நுாலகம் மணிவேல், ஏ.வாடிப்பட்டி: நூலகங்களில் ஏராளமான பொது அறிவு நூல்கள் உள்ளன. நூலகம் முழுவதும் நான்கு புறமும் சுவர்களில் விரிசல் விட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்குள்ள வாசகர்கள் மாவட்ட நூலகத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்குள் நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.