/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்து சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றாமல் முதல்வர், அமைச்சர்கள் தவறான பிரசாரம் தேனி, போடியில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேச்சு

ADDED : செப் 07, 2025 03:32 AM
தேனி: தேர்தல் அறிக்கையில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல் 98 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களும் தவறான தகவலை கூறுகின்றனர்,' என மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரத்தில் நேற்று முன்தினம் தேனி, போடியில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
அவர் பேசியதாவது: தி.மு.க.,வின் ஐந்தாண்டுகள் முடியும் தருவாயில் ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக கடன் வாங்கிய அரசு தி.மு.க., அரசு. சமீபத்தில் முதல்வர் ஜெர்மன் சென்றிருக்கிறார்.
ரூ.3200 கோடி முதலீடு ஈர்த்ததாக கூறுகின்றனர். அதில் 2 தொழில் அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டு, அதை விரிவாக்கம் செய்ய ஜெர்மன் சென்றுஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே புதியது. அதுவும் இந்தியாவில் தொழில் தொடங்கிய நிறுவனமே.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை வெளியிட்டனர்.அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல் 98 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதல்வரும், அமைச்சர்களும்தவறான தகவலை கூறுகின்றனர். ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி வழங்கி னோம். நாகூர்தர்காவிற்கு சந்தன கட்டைகளை விலையில்லாமல் கொடுத்தோம் பா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சி. நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா என்றார்.
வரி சுமையை ஏற்படுத்திய தி.மு.க. அரசு போடியில் அவர் பேசியதாவது: ஜெயலலிதா முதன் முதலாக வெற்றி பெற்ற தொகுதி போடி. தி.மு.க., ஆட்சியில் வீட்டு வரி, மின் கட்டணம், கட்டுமான பொருட்கள் 100 சதவீதம் உயர்த்தி உள்ளது. மக்கள் மீது வரி சுமத்திய அரசு தி.மு.க., கல்வி கடன் ரத்து, 100 நாள் வேலை சம்பளம் உயர்வு கூறினார்கள். அதனை நிறைவேற்றவில்லை. ஆட்சிகள் மாறலாம் நல்ல திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அதை மூடக்க கூடாது.டாஸ்மாக் மூலம் ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்து உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நிகழ்ச்சிகளில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.