/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயிற்சி மையம் சேதம் போலீசார் விசாரணை
/
பயிற்சி மையம் சேதம் போலீசார் விசாரணை
ADDED : ஆக 26, 2025 04:23 AM
மூணாறு: மாநில விளையாட்டு துறைக்கு சொந்தமான உயர்தர விளையாட்டு பயிற்சி மைய கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்தனர்.
பழைய மூணாறில் மாநில விளையாட்டு துறைக்கு சொந்தமான உயர்தர விளையாட்டு பயிற்சி மையம் உள்ளது. அங்கு அலுவலகம், விளையாட்டு வீரர்கள் தங்க அறைகள், கூட்ட அரங்கம் உட்பட பல்வேறு தேவைகளுக்கான கட்டடம் உள்ளது. தற்போது மையத்தில் தங்கி சில வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக வார விடுமுறை என்பதால் வீரர்கள் வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மையத்தினுள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் கட்டத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். அதில் ரத்தம் படிந்துள்ளதால், கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றிருக்கலாம் என தெரியவந்தது. மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.