ADDED : செப் 07, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சப் டிவிஷன் அளவில் ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் தமிழக காவலர் தின நிகழ்ச்சி டி.எஸ்.பி.சிவசுப்பு தலைமை ஏற்று துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்.
போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமாரி, காயத்ரி, போதுமணி, எஸ்.ஐ.,க்கள் மணிகண்டன், முஜிபுர் ரஹ்மான், பிரேம் ஆனந்த், ராமசாமி உட்பட போலீசார் பங்கேற்றனர்.