ADDED : செப் 07, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: திருச்சி கஜா பேட்டை, பசுமடம் வேம்பாடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமு 72. இவர் போடி பஸ் ஸ்டாண்டில் பையுடன் நின்று இருந்தார்.
சந்தேகம் அடைந்த போலீசார் இவரிடம் சோதனை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட 6.250 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தது தெரிந்தது. போலீசார் ராமுவை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.