/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பானிபூரி கடைக்கு வந்தவர்களை ஏமாற்றி மோசடி
/
பானிபூரி கடைக்கு வந்தவர்களை ஏமாற்றி மோசடி
ADDED : ஆக 28, 2025 02:14 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே இரண்டு கார்களில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களில், சிவா, 35, என்பவரிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தினர். போலீசார் கூறியதாவது:
சிவாவுக்கும், கோவையில் பானிபூரி கடை வைத்து இருக்கும் ராஜஸ்தான் மாநில இளைஞர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பானி பூரி கடைக்கு வந்தவர்களை ஏமாற்றி, அவர் களின் வங்கி கணக்கு, சிம் கார்டு, ஆதார் அடையாள எண் போன்றவற்றை பெற்று, வங்கிக்கணக்கு களை துவக்கி, ஏராளமான பணம் மோசடி செய்து உள்ளனர்.
இது தொடர்பாக, சிவா, அவரது நண்பரான சாரதி, 21, மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்துள்ளோம்.
இவ்வாறு கூறினர்.