/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் -அய்யனார்குளம் ரோடு 24 மணி நேரமும் ஓடும் லாரிகளால் சேதம் 15 கி.மீ., துாரம் மக்கள் அவதி பயணம்

ADDED : மே 08, 2025 03:18 AM
சிவகங்கை,: காளையார்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பாகனேரி வரை செல்லும் ரோட்டில் 24 மணி நேரமும் லாரிகள் ஓடுவதால் ரோடு கடும் சேதமாகி வருகிறது.
காளையார்கோவில் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ரோட்டில் 24 மணி நேரமும் லாரிகள் கிராவல் மண்ணை எடுத்து வேகமாக செல்வதால், இந்த ரோடு நாளுக்கு நாள் சேதமடைந்து வருகிறது. மின்வாரிய அலுவலகம் முதல் அய்யனார் குளம் செல்லும் ரோட்டில் குறிஞ்சி, கைகேல் நகர், அதிதுாதர், திலக், கிருஷ்ணா நகர் என பல்வேறு நகரில் ஏராளமான வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் காளையார்கோவில் வரை அய்யனார் குளம் ரோட்டை தான் பயன்படுத்த வேண்டும். அதே போன்று காளையார்கோவிலில் இருந்து அய்யனார்குளம், அரியநாச்சி நகர், மோர்குழி, பனங்குடி, நடராஜபுரம் வழியாக பாகனேரி ரயில்வே கேட் வரை 15 கி.மீ., துாரத்திற்கு செல்லும் மக்கள் இந்த ரோட்டை தான் பயன்படுத்துகின்றனர்.
கடந்த சில ஆண்டாக காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், இந்த ரோட்டை புதுப்பிக்காமல் விட்டதால், கிராவல் மண் எடுத்து செல்லும் லாரிகளால் ரோடு சேதமாகி கிடக்கிறது. இதனால் இப்பகுதி கிராமங்களுக்கு செல்ல கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன டிரைவர்கள் வர மறுக்கின்றனர்.
எனவே காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இந்த ரோட்டை புதுப்பித்து தரவேண்டும். மேலும், டிப்பர் லாரிகள் செல்வதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.