/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இணைப்புச் சாலை விரிவுபடுத்த கோரிக்கை
/
இணைப்புச் சாலை விரிவுபடுத்த கோரிக்கை
ADDED : ஜூலை 25, 2025 12:10 AM
திருக்கோஷ்டியூர்; திருப்புத்துார் அருகே பட்டமங்கலத்தில் இணைப்புச் சாலைகளை பராமரிக்கவும், விரிவுபடுத்த வலியுறுத்தி மார்க். கம்யூ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டரமாணிக்கம் -பட்டமங்கலம் -திருக்கோஷ்டியூர், பட்டமங்கலம் -சொக்கநாதபுரம் இணைப்பு ரோடுகளை இருவழிச்சாலையாக மேம்படுத்தக்கோரியும், பராமரிப்பின்றி மோசமாக உள்ள பகுதிகளை மழைக் காலத்திற்கு முன் பராமரிக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர் விஎல்.பாலு, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில், திருக்கோஷ்டியூர்- முதல் சிந்தாமணிப்பட்டி வரை 4 கி.மீ. துாரத்திற்கு இருவழிச்சாலை பணிகள் துவங்க உள்ளதாகவும், மீதமுள்ள பகுதி அடுத்த கட்டமாக அமைக்கப்படும் என்றும், சொக்கநாதபுரம் ரோடு நிதி அனுமதியான பின் மேம்படுத்தப்படும் என கூறியதை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு ஆர்ப்பாட்டத்துடன் கலைந்தனர்.

