/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்டர் வசதி
/
திருப்புத்துாரில் ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்டர் வசதி
திருப்புத்துாரில் ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்டர் வசதி
திருப்புத்துாரில் ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்டர் வசதி
ADDED : செப் 07, 2025 03:12 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்டர் மீண்டும் திறக்க ரயில் பயணிகள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார்,சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த மக்கள் ரயில் பயணத்திற்கு காரைக்குடி,மதுரை,திருச்சி சென்று பயணம் செய்கின்றனர். முன்பு ரயில் பயணிகளுக்கு வசதியாக திருப்புத்தூர் அஞ்சல் அலுவலகத்தில் ரயில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டது. இதற்காக தனி கவுன்டர் வசதியை தென்னிந்திய ரயில்வே அஞ்சலகத்துடன் இணைந்து செயல்படுத்தியது. நேரடியான ஆன்லைன் இணைப்பு மூலம் டிக்கெட் பதிவு செய்து வழங்கப்பட்டது.
ஆனால் அதற்கான பிரத்யேக பணியாளர் நியமிக்கப்படாததால் அந்த வசதியை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. வேறு பணிகளில் உள்ளவரே அந்த சேவையையும் சேர்த்து பணியாற்ற வேண்டியதால் முழுமையாக பணியாற்ற முடியவில்லை. மேலும் ரயில் விபரங்கள் தெரியாமலும் டிக்கெட் பதிவு முழுமையாக நடைபெறவில்லை. ரயில் பயணிகள் அஞ்சலகத்துறையிடம் இந்த சேவைக்கு தனி பணியாளர் நியமிக்க கோரியும் புறக்கணிக்கப்பட்டது.
இதனால் போதிய அளவில் டிக்கெட் பதிவு ஆகவில்லை என்ற காரணத்தை கூறி இந்த வசதியை தென்னிந்திய ரயில்வே மூடி விட்டது.
இதனால் திருப்புத்தூர் பகுதி ரயில் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் அந்த வசதியைக் கொண்டு வர அஞ்சலகத்துறையும், தென்னிந்திய ரயில்வேயும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.