/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இருளில் மூழ்கிய பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
/
இருளில் மூழ்கிய பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
இருளில் மூழ்கிய பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
இருளில் மூழ்கிய பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : செப் 07, 2025 03:13 AM
பூவந்தி: பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் ஆய்வில் தெரியவந்து அதிருப்தி தெரிவித்தார்.
பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் தவிர அருகில் உள்ள மதுரை மாவட்ட மக்களும் பயன் பெறுகின்றனர். தேசிய தர சான்று பெற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகும்.
பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினசரி 250க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாக கட்டடம், சித்த மருத்துவ கட்டடம், புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட ஆறு கட்டட தொகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தரையின் அடியில் கொண்டு செல்ல பதிக்கப்பட்ட கேபிள்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனை சரி செய்யாமல் புறநோயாளிகள் பிரிவை மட்டும் அதிகாரிகள் அருகில் உள்ள கட்டடத்திற்கு மாற்றியுள்ளனர். நேற்று காலை 9:30 மணிக்கு தொண்டி செல்லும் வழியில் பூவந்தியில் ஆய்வு மேற்கொண்ட சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியன் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டார். 30 நிமிட ஆய்விற்கு பின் புறப்பட்டு சென்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் சுகுணா கூறுகையில் : மருத்துவமனை வளாகத்தில் எனது அறையில் மட்டும் தான் மின்சாரம் இல்லை, நலம் காக்கும் திட்ட முகாம் ஏற்பாடுகளில் இருந்ததால் சரி செய்ய முடியவில்லை, என்றார்.