/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உயரமாகும் சாலைகளால் மக்கள் பாதிப்பு
/
உயரமாகும் சாலைகளால் மக்கள் பாதிப்பு
ADDED : டிச 23, 2025 05:51 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பழைய ரோட்டை புதுப்பிக்கும் போது கிளறா மலும், பழைய கற்களை அகற்றாமலும் உயரமாக போடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் பிரான்மலை, சதுர்வேத மங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும், சிங்கம்புணரி பேரூராட்சி பகுதி களிலும் பேவர் பிளாக், தார் ரோடு போடப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் பழைய ரோட்டை கிளறி அப்புறப்படுத்தாமல் ரோடு போடப்படும் போது அதன் உயரம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் இருபுறமும் உள்ள குடியிருப்புகள் தாழ்ந்து மழைநீர், கழிவு நீர் வெளியேற முடியாத சூழல் ஏற்படுகிறது.
பழைய ரோட்டை புதுப்பிக்கும் போது ரோட்டை கிளறி அப்புறப் படுத்திவிட்டு உயரம் அதிகமாகாமல் சாலை அமைக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல இடங்களில் இந்த விதிமுறைகளை பின் பற்றாமல் ரோட்டின் உயரத்தை அதிகப்படுத்திக் கொண்டே செல்கின்றனர்.
இதனால் ரோடுகளை ஒட்டியுள்ள வீடுகள் தாழ்வாகி பல்வேறு இடையூறு ஏற்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் அனைத்து பழைய ரோடுகளையும் கிளறிவிட்டு ஏற்கனவே உள்ள உயரத்தை விட அதிகரிக்காமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

