ADDED : டிச 23, 2025 05:52 AM

திருப்புவனம்: மடப்புரம் அரியவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் கேசவ பாண்டியன் தலைமை வகித்தார். மூத்த முதல்வர் கண்ணன் வரவேற்றார். கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவ, மாணவியர்கள் ஏஞ்சல் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்தனர். முதல்வர் தனபாலன் நன்றி கூறினார்.
* சிவகங்கை சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பு காட்சியை விளக்கும் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போலவும், மாணவிகள் தேவதைகள் போலவும் வேடமணிந்து வந்திருந்தனர்.
பள்ளி செயலர் சேகர் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினை கூறினார். தலைமையாசிரியர் தியாக ராஜன், உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன் சரவணன், பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி, சக்திவேல், சுரேஷ்குமார், ஜெயமணி, மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துப் பஞ்சவர்ணம், ஆசிரியர் பாண்டிச்செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

