ADDED : மார் 21, 2024 02:08 AM

சிவகங்கை: காளையார்கோவில் அருகே மருதங்குடி கருவில் உடைய அய்யனார் கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
இங்குள்ள பூர்ணாதேவி, புஷ்கலாதேவி உடனாய கருவில் உடைய அய்யனார் கோயிலில் கும்பாபிேஷக விழா மார்ச் 18 முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. மகா பூர்ணாஹூதி, ஜெப ேஹாமம் நடந்தது.
மார்ச் 19 ல் இரண்டாம் கால யாகசாலை அதை தொடர்ந்து காயத்ரி, மகாலட்சுமி ேஹாமம் நடந்தது. அன்று மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், திருமுறைகள் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கின. கடம் புறப்பாடுடன் சிவாச்சாரியார்கள் கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மருதங்குடி கிராம மக்கள் கும்பிேஷக விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.

