ADDED : மார் 21, 2024 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி தேரோட்டத்திற்காக தேரை தயார் செய்யும் பணியில் பக்தர்களும், தேவஸ்தான நிர்வாகமும் ஈடுபட்டுள்ளனர்.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ஆலய பங்குனி திருவிழா மார்ச் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் வெள்ளிகிழமை காலை 9:30 மணிக்கு நடைபெறுகிறது. தேரோட்டம் சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு நடைபெற உள்ளது.
தேரோட்ட நிகழ்விற்காக தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி ஆகியோரது தலைமையில் டி.வி.எஸ்., நிறுவன ஊழியர்கள் தேரை தயார் செய்து வருகின்றனர்.

