/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாருக்கு காங்., குழு வருகை
/
திருப்புத்துாருக்கு காங்., குழு வருகை
ADDED : நவ 27, 2025 06:56 AM
திருப்புத்துார்: சிவகங்கை காங்கிரசுக்கு புதிய மாவட்டத் தலைவர் நியமனத்துக்கான விண்ணப்ப மனுக்கள் பெற காங்.குழுவினர் திருப்புத்துார் வந்தனர்.
காங், கட்சியில் புதிய மாவட்டத் தலைவர்களை டிச.9 க்குள் நியமிக்க அக்கட்சியின் 'சங்கத்தன் ஸ்ரீஜன் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ளது. அதற்காக தேசிய, மாநில பார்வையாளர் அடங்கிய குழு மாவட்டங்களுக்கு சென்று, மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, மாவட்டத்தின் நிலைமை, வரும் சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் செய்ய வேண்டியது குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும் புதிய மாவட்டத் தலைவர் குறித்த விண்ணப்ப மனுக்களையும் வாங்கி வருகின்றனர்.
குழுவில் மேலிட பொறுப்பாளர் நிலேஷ் சதுர்வேதி, மாநில பார்வையாளர்கள் வானமாமலை, கலைச்செல்வன் உள்ளனர். நேற்று காலை இக்குழுவினர் திருப்புத்துார் காங். அலுவலகம் வந்தனர். அவர்களிடம் மாவட்டத்துணைத் தலைவர் வக்கீல் கணேசன் மாவட்டத் தலைவர் நியமனத்திற்காக விருப்ப மனுவை அளித்தார். மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி,தொகுதி பொறுப்பாளர் இளம்பரிதி கண்ணன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
முன்னதாக இக்குழுவினர் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வட்டாரம் வாரியாக கட்சியினரிடம் மாவட்டத் தலைவருக்கான விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றனர். நேற்று திருப்புத்தூர்,கல்லல்,சிங்கம்புணரி,எஸ்.புதூர் ஒன்றியங்களில் வாங்கினர்.

