sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 சிறப்பு தீவிர திருத்த பணி விண்ணப்பம்  விரைந்து வழங்க கலெக்டர் உத்தரவு 

/

 சிறப்பு தீவிர திருத்த பணி விண்ணப்பம்  விரைந்து வழங்க கலெக்டர் உத்தரவு 

 சிறப்பு தீவிர திருத்த பணி விண்ணப்பம்  விரைந்து வழங்க கலெக்டர் உத்தரவு 

 சிறப்பு தீவிர திருத்த பணி விண்ணப்பம்  விரைந்து வழங்க கலெக்டர் உத்தரவு 


ADDED : நவ 27, 2025 07:03 AM

Google News

ADDED : நவ 27, 2025 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிறப்பு தீவிர திருத்த பணி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டிச., 4 க்கு பின் ஒப்படைத்தால் டிச., 9ல் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியாது என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டசபை தொகுதியில் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக நவ., 4 முதல் வாக்காளர்கள் வீடு தோறும் விண்ணப்பத்தை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உடனுக்குடன் அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திரும்ப ஒப்படைக்க டிச., 4 கடைசி நாள் ஆகும்.

அதற்குள் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்கும் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே டிச., 9ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியாகும். டிச., 4 க்கு பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கொடுத்தால், பட்டியலில் இடம் பெறாது. எனவே விரைந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us