/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுவர்கள் ஓட்டிச் சென்ற கார் விபத்து
/
சிறுவர்கள் ஓட்டிச் சென்ற கார் விபத்து
ADDED : செப் 07, 2025 03:15 AM

சிவகங்கை: சிவகங்கையில் திருப்புத்துார் ரோட்டில் சிறுவர்கள் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவகங்கை சித்தலுாரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவர். இவரது உறவினருக்கு சொந்தமான காரில் இந்திராநகரை சேர்ந்த 17 வயது சிறுவன், முத்துச்சாமி நகரை சேர்ந்த 17 வயது சிறுவர் இருவர் உட்பட 4 பேர் சிவகங்கை காளவாசல் பகுதியில் இருந்து காரில் திருப்புத்துார் ரோட்டில் நேற்றுமதியம் 1:30 மணிக்கு சென்றனர். கார் இளந்தங்குடிப்பட்டி கண்மாய் அருகே சென்றபோது சிறுவர்களின் கட்டுப்பாட்டை இழந்து கார் ரோட்டின் ஓரமாக இருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
சிறுவர்கள் 4 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். விபத்து குறித்து சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.