ADDED : செப் 07, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் சூரியன்பட்டி, மார்க் கண்டேயன்பட்டி கிராமங்களில் சமுதாய கூடம் அமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.
திருப்புத்தூர் ஒன்றியம் வையகளத்துார் ஊராட்சியைச் சேர்ந்தது சூரியன் பட்டி, மார்க்கண்டேயன்பட்டி. இக் கிராமங்களில் தொழிலாளர்களே அதிகமானோர் வசிக்கின்றனர். சூரியன்பட்டியில் 500, மார்க்கண்டேயன்பட்டியில் 800-க்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக இவர்கள் வசிக்கும் பகுதியில் சமுதாயக் கூடம் கட்ட கோருகின்றனர்.
நிகழ்ச்சி நடத்த தற்காலிக கொட்டகை அமைப்பதால் அதிகம் செலவாகிறது. இதனால் நிகழ்ச்சி நடத்த சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டால் பொது விழாக்கள் நடத்தவும், கிராமத்தினர் கூடுதல் வசதி பெறவும் உதவும்.