/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசியல் கட்சியினர் கோரிக்கையால் 4ல் இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம்
/
அரசியல் கட்சியினர் கோரிக்கையால் 4ல் இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம்
அரசியல் கட்சியினர் கோரிக்கையால் 4ல் இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம்
அரசியல் கட்சியினர் கோரிக்கையால் 4ல் இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம்
ADDED : நவ 02, 2025 01:24 AM
மேட்டூர் மேட்டூர் சட்டசபை தொகுதி, வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று மேட்டூரில் நடந்தது. ஆர்.டி.ஓ., சுகுமார் தலைமை வகித்தார். தொகுதி தேர்தல் துணை தாசில்தார் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
அதில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த இரண்டாம் கட்ட ஆய்வு கூட்டம், நவ., 3ல்(நாளை) நடத்தப்படும் என, ஆர்.டி.ஓ., கூறினார். அதற்கு, 'மேட்டூர், கொளத்துார், மேச்சேரி பகுதிகளில் இருந்து பங்கேற்கும் அரசியல் கட்சி நிர்வாகிகளால், கூட்டமாக இருக்கும். அதை குறைக்க, கூட்டத்தை, 3 இடங்களில் நடத்த வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் நவ., 3ல் முகூர்த்த நாள் என்பதால், பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் பங்கேற்க முடியாது. அதனால், 4ல் நடத்த வலியுறுத்தினர். தொடர்ந்து, 4 காலை கொளத்துார், மேட்டூரில் இரு இடங்கள் என, 316 ஓட்டுச்சாவடிக்கான ஆய்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பா.ஜ., காங்., தி.மு.க., - அ.தி.மு.க., உள்பட, 14 கட்சி நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதேபோல் ஆத்துார் தொகுதிக்கு உட்பட்ட, அங்கீரிக்கப்பட்ட கட்சிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுடன், ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., தமிழ்மணி தலைமையில் கூட்டம் நடந்தது. சங்ககிரி தொகுதி
யில், ஆர்.டி.ஓ., கேந்திரியா தலைமையில் நடந்தது.

