/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் புது வாக்காளர் படிவம் வழங்கலாம்'
/
'ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் புது வாக்காளர் படிவம் வழங்கலாம்'
'ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் புது வாக்காளர் படிவம் வழங்கலாம்'
'ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் புது வாக்காளர் படிவம் வழங்கலாம்'
ADDED : நவ 02, 2025 01:23 AM
சேலம், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து, அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் கமிஷனர் இளங்கோவன் பேசியதாவது: சேலம் வடக்கு தொகுதியில், 262 ஓட்டுச்சாவடிகளில், 2.74 லட்சம் வாக்காளர்கள், சேலம் தெற்கில், 239 ஓட்டுச்
சாவடிகளில், 2.56 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
நவ., 4 முதல், டிச., 4 வரை நடக்க உள்ள வாக்காளர் திருத்த பணிக்கு, படிவங்கள் அச்சிட்டு வழங்கி பணி தொடங்கப்பட உள்ளது. புது வாக்காளர்களாக பெயர் சேர்க்க விரும்புவோர், அவரவர் பகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம், 6ஐ நேரடியாக வழங்கலாம். கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், தீவிர திருத்த சிறப்பு உதவி மையத்தை, 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.