/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பழகிய'தால் பறிபோனது ரூ.9 லட்சம் மேலும் மிரட்டலால் 4 பேர் மீது வழக்கு

ADDED : ஜூலை 26, 2025 01:35 AM
சேலம், சேலம், அழகாபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார். தர்மபுரியில் உள்ள தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் பணிபுரிகிறார். ஓராண்டுக்கு முன், சேலம், அழகாபுரத்தில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய போது, சக பெண் பணியாளரிடம் பழக்கம்
ஏற்பட்டது.
ஆனால் கடந்த ஜனவரியில், அப்பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணமானது. அதற்கு பின் அப்பெண், சசிகுமாருடன் பழகியதை, கணவரிடம் தெரிவித்துள்ளார்.
அவர், அவரது நண்பர்கள் உள்பட, 4 பேருடன் சேர்ந்து, சசிகுமாரை சந்தித்து பேசினர். இதையடுத்து சசிகுமார்,
அப்பெண்ணின் கணவருக்கு, 80,000 ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது.
இதனிடையே அந்த பெண்ணின் கணவர் உள்பட, 4 பேர், சசி குமாரை சந்தித்து, பெண்ணுடன் நெருங்கி பழகி இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். மேலும், அதை வெளியிடாமல் இருக்க, 9 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிகிறது.
இந்நிலையில் மேலும், 10 லட்சம் ரூபாய் கேட்டு சசிகுமாரை மிரட்டினர். இதனால் வேறு
வழியின்றி, சசிகுமார், அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, 4பேர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.