/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காகம் அமர்ந்தபோது மின் கம்பிகள் உரசி தீ தறிக்கூடத்தில் ரூ.1.50 கோடிக்கு சேதம்

ADDED : ஜூலை 26, 2025 01:36 AM
சேலம், சேலம், அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம், 65. அதே பகுதியில் விசைத்தறிக்கூடம் நடத்துகிறார். 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
அங்கு நேற்று மாலை, 5:30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. பணியாளர்கள் அதிர்ச்சி
யடைந்து வெளியேறினர். நுால் கோன், இயந்திரங்களில் தீ பரவி மளமளவென எரிந்தது.
செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, தீயை அணைக்க முயன்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வர முடியாதபடி, குறுகலான பாதையாக இருந்ததால், அருகே வசிக்கும் வீடுகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து, தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தீயணைப்புத்துறையினர் கூறுகையில், 'தறி கூடம் மேலே உள்ள மின் கம்பியில் காகங்கள் அமர்ந்தபோது, மின் கம்பிகள் உரசி தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் துணி ரகங்கள், இயந்திரங்கள் என, 1.50 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டது' என்றனர்.