/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது துணைவேந்தர் தேர்வு நடைமுறை தொடக்கம்
/
புது துணைவேந்தர் தேர்வு நடைமுறை தொடக்கம்
ADDED : மார் 11, 2024 06:51 AM
ஓமலுார் : சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிய உள்ளது.
இதனால் புது துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான நடைமுறையை, பல்கலை நிர்வாகம் தொடங்கியுள்ளது. வழக்கமாக இத்தேர்வு குழுவில் ஆட்சி குழு சார்பில் ஒரு பிரதிநிதி, ஆட்சி பேரவை சார்பில் ஒரு பிரதிநிதி இடம் பெறுவர். அரசு சார்பில் தேடுதல் குழு ஒருங்கிணைப்பாளர் நியமித்த பின், விண்ணப்பம் பெறும் பணி தொடங்கும்.தேடுதல் குழுவில் இடம் பெறும் பிரதிநிதிகளை ஆட்சி குழு, ஆட்சி பேரவை உறுப்பினர்கள் பரிந்துரைக்கலாம் என, பல்கலை பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி (பொ), அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பதிவாளர் அலுவலகத்தில், வரும், 21க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம். இதில் போட்டி இருப்பின் தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

