/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது ரேஷன் கார்டுக்கு ரூ.4,000 லஞ்சம் கூட்டுறவு கடன் சங்க உதவியாளர் கைது

ADDED : ஏப் 05, 2024 01:53 AM
ஓமலுார்:சேலம்
மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டியை சேர்ந்தவர்
ராஜேந்திரன், 59. பூசாரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்
சங்கத்தில், 20 ஆண்டுக்கு மேலாக உதவியாளராக பணிபுரிகிறார்.
இவரிடம் பூசாரிப்பட்டி, வைரங்காட்டை சேர்ந்த செல்வராணி, 27,
என்பவர், புது ரேஷன் கார்டு கேட்டு அணுகியுள்ளார். அதற்கு, 5,000 ரூபாய்
செலவாகும் என ராஜேந்திரன் கூறியுள்ளார்.
அதை கொடுக்க முடியாத
செல்வராணி, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்படி
நேற்று மதியம், குறவன்காடு ரேசன் கடை அருகே செல்வராணி
முதல்கட்டமாக, ராஜேந்திரனிடம், 4,000 ரூபாய் கொடுத்தார். அப்போது
மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு துறையின் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்
தலைமையில் போலீசார், ராஜேந்திரனை பிடித்து கைது செய்தனர்.