/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயம்
/
டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயம்
ADDED : ஆக 24, 2025 12:36 AM
ராணிப்பேட்டை, வாலாஜா அருகே டிராவல்ஸ் பஸ் கவிழ்ந்ததில், 30 பேர் காயமடைந்தனர்.
பெங்களூருவிலிருந்து சென்னைக்கு ஒரு தனியார் டிராவல்ஸ் பஸ், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சில், 30 பயணிகள் இருந்தனர். டிரைவர் முகமது, ௪௫, ஓட்டினார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட் அருகே அதிகாலை, ௩:௦௦ மணிக்கு பஸ் சென்றது. டோல்கேட்டை கடந்து சென்றபோது முன்னால் சென்ற வாகனம் திடீரென நின்றது. இதனால் அதன் மீது மோதாமல் இருக்க, முகமது திடீர் பிரேக் போட்டார்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் ஒருபக்கமாக கவிழ்ந்தது. இதில், ௩௦ பயணிகளும் லேசான காயமடைந்தனர். வாலாஜா போலீசார் அவர்களை மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பஸ்சை கிரேன் மூலம் அகற்றினர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.