/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
கொலை வழக்கு விசாரணையில் மெத்தனம்; 2 போலீசார் 'சஸ்பெண்ட்'
/
கொலை வழக்கு விசாரணையில் மெத்தனம்; 2 போலீசார் 'சஸ்பெண்ட்'
கொலை வழக்கு விசாரணையில் மெத்தனம்; 2 போலீசார் 'சஸ்பெண்ட்'
கொலை வழக்கு விசாரணையில் மெத்தனம்; 2 போலீசார் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 18, 2025 03:45 AM
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தி.மு.க.,வை சேர்ந்த அஸ்வினி, 44; இவரது கணவர் சுதாகர், 48; அம்மனுார் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி அவினேஷ்குமார், ௨௧; இவருக்கும், சுதாகருக்கும் முன் விரோதம் இருந்தது. இதில் சுதாகரை கத்தியால் குத்திய வழக்கில் கைதான அவினேஷ்குமார், ஜாமினில் வந்தார். ரத்தின-கிரி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த, 10ம் தேதி கையெழுத்திட சென்றவரை, சுதாகர் உள்ளிட்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக சுதாகர், அஸ்வினி உள்ளிட்ட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் போதிய நடவடிக்கை எடுக்காமல், மெத்தனம் காட்டிய-தாக, அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அரக்கோணம் கான்ஸ்ட-பிள்கள் காதர்பாஷா, 45, சிவக்குமார், 34, ஆகியோரை, பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக, எஸ்.பி.,
அய்மன் ஜமால் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்