/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி யூனியனில் 39 ஊராட்சிகளில் 453 கழிப்பறைகள் அமைக்க இலக்கு
/
பரமக்குடி யூனியனில் 39 ஊராட்சிகளில் 453 கழிப்பறைகள் அமைக்க இலக்கு
பரமக்குடி யூனியனில் 39 ஊராட்சிகளில் 453 கழிப்பறைகள் அமைக்க இலக்கு
பரமக்குடி யூனியனில் 39 ஊராட்சிகளில் 453 கழிப்பறைகள் அமைக்க இலக்கு
ADDED : அக் 19, 2024 04:43 AM

பரமக்குடி : - பரமக்குடி யூனியனுக்கு உட்பட்ட 39 ஊராட்சிகளில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 453 கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறைகளை கட்ட மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி வருகிறது.
இதன்படி கழிப்பறை கட்டுதல், குப்பைகளை தரம்பிரித்தல், திட, மற்றும் திரவு கழிவு மேலாண்மை குறித்து மக்கள் மத்தியில் விழிப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பணியாற்றும் ஊக்குனர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
பரமக்குடி ஆணையாளர் தேவ பிரியதர்ஷினி தலைமை வகித்தார். மேலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கணினி அலுவலர் சண்முகப்பிரியா வரவேற்றார். 39 ஊராட்சிகளில் ஏற்கனவே 10ஆயிரம் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 453 கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.