UPDATED : நவ 02, 2025 11:03 PM
ADDED : நவ 02, 2025 09:18 PM

ஜோத்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூரில் லாரி மீது வேன் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் பலோடி பகுதியை சேர்ந்தவர்கள் பிகானீரில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வேனில் திரும்பிகொண்டு இருந்தனர்.வேன் ஜோத்பூரின் பாரத்மாலா எக்ஸ்பிரஸ்வேயில் வந்து கொண்டு இருந்த போது மதோதா கிராம பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மற்றும் அந்த சாலையில் சென்ற மற்ற பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வேனில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 15 பேர் உயிரிழப்புக்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

