ADDED : செப் 07, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடடப்பட்டது. கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்வில் குத்துவிளக்கு ஏற்றி அதைச் சுற்றி பல வண்ணங்களில் அத்திப்பூ மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.
மாணவிகள் மதநல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு வண்ணங்களில் ரங்கோலி கோலமிட்டனர். செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானாஸ் பரூக் அப்துல்லா சிறந்த ரங்கோலிக்கு பரிசு வழங்கினார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா பங்கேற்றனர்.