/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்
/
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம்
ADDED : செப் 07, 2025 03:03 AM

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான ஸ்ரீதேவி, பூதேவி சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் பரமசுவாமி வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலில் ஒவ்வொரு விழாக்களின் போதும் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பரிகார உற்சவமாக பவித்ரோத்ஸவம் நடக்கிறது.
அந்த வகையில் மதுரை அழகர் கோவிலை போன்று, பரமக்குடி பெருமாள் கோயிலில் அனைத்து சுவாமிகளுக்கும் பவித்திர மாலைகள் அணிவிக்கப்பட்டு காலை, மாலை தீபாராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து விழா ஐந்து நாட்கள் நடைபெறும் நிலையில், நிறைவு நாளில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருகிறார்.