/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீவிர வாக்காளர் திருத்தப் பணியால் அடங்கல் சான்று வழங்குவதில் தொய்வு
/
தீவிர வாக்காளர் திருத்தப் பணியால் அடங்கல் சான்று வழங்குவதில் தொய்வு
தீவிர வாக்காளர் திருத்தப் பணியால் அடங்கல் சான்று வழங்குவதில் தொய்வு
தீவிர வாக்காளர் திருத்தப் பணியால் அடங்கல் சான்று வழங்குவதில் தொய்வு
ADDED : நவ 11, 2025 03:28 AM
தேவிபட்டினம்: வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் வி.ஏ.ஓ,க்கள் ஈடுபட்டு வருவதால், நெல் பயிர் இன்சூரன்ஸ்கான சாகுபடி அடங்கல் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
விவசாயிகள் சாகுபடி செய்யும் சாகுபடி பயிர்கள், வறட்சி மற்றும் இயற்கை சீற்றத்தின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் போது, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 2016 முதல் பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல் பயிர்களுக்கு நவ.15 க்குள் இன்சூரன்ஸ் பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வி.ஏ.ஓ.க்கள் வாக்காளர் திருத்த பணியில் ஈடுபட்டு வருவதால், பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கான அடங்கள் சான்று வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள், விவசாயிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இன்சூரன்ஸ் பதிவு மேற்கொள்ளும் வகையில் அடங்கல் சான்று வி.ஏ.ஓ.க்கள் வழங்க அறிவுறுத்த வேண்டும.
அல்லது இன்சூரன்ஸ் பதிவுக்கான காலக் கெடுவை நீட்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி னர்.

