/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்ட சி.ஐ.டி.யு., அமைப்பினர் 106 பேர் கைது

ADDED : டிச 24, 2025 05:29 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட சி.ஐ.டி.யு., அமைப்பினர் 106 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று சி.ஐ.டி.யு., சார்பில் மறியல் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இருந்து மாநில துணைத் தலைவர் மகாலெட்சுமி தலைமையில் நுாறுக்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைமை அஞ்சலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அஞ்சல் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய 106 பேரை போலீசார் கைது செய்தனர். மாநில துணைத் தலைவர் மகாலெட்சுமி கூறியதாவது:
நுாறாண்டுகளுக்கு மேல் தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்களை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு 4 சட்டத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
தொழிலாளர் சட்ட தொகுப்புகளை எதிர்த்து தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மாவட்ட செயலாளர் சந்தானம், பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.