/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் பணியாளர்கள் செப்., 5ல் வேலை நிறுத்தம்
/
ரேஷன் பணியாளர்கள் செப்., 5ல் வேலை நிறுத்தம்
ADDED : ஆக 29, 2024 07:58 PM
ராமநாதபுரம்:தமிழ்நாடு அரசு ரேஷன் பணியாளர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி செப்., 5ல் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
சங்க மாநில செயலர் மாரிமுத்து, துணை தலைவர் தினகரன் கூறியதாவது:
சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக ரேஷனில் வழங்க வேண்டும். நுாறு சதவீதம் ஒதுக்கீடு, வேறு மாவட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு, ஒரே நேரத்தில் உரிய காலத்தில் பொருட்கள் வழங்க வேண்டும். பொதுமக்கள் கருத்து கேட்டு பொருட்கள் வழங்க வேண்டும்.
கட்டாய இறக்கு கூலி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும். பாமாயில், பருப்பு இறக்குமதி காலதாமத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா ஆகியோர் வழிகாட்டுதலின் படி செப்., 5ல் மாநில அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

