/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பு இல்லாத அரசு குடியிருப்புகள் ;விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியதால் அச்சம்
/
பராமரிப்பு இல்லாத அரசு குடியிருப்புகள் ;விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியதால் அச்சம்
பராமரிப்பு இல்லாத அரசு குடியிருப்புகள் ;விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியதால் அச்சம்
பராமரிப்பு இல்லாத அரசு குடியிருப்புகள் ;விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியதால் அச்சம்
ADDED : ஜன 16, 2024 10:50 PM

குன்னுார்;குன்னுார் ஹேர்வுட் பகுதியில் உள்ள, அரசு குடியிருப்புகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
குன்னுார், 25வது வார்டுக்கு உட்பட்ட ஹேர்வுட் குடியிருப்பு பகுதியில் வருவாய் துறை உட்பட பல்வேறு அரசு துறைகளின், 60 குடும்பங்கள் உள்ளன.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால குடியிருப்புகள் பெரும்பாலும் மண் சுவர்களாக உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்களும் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. பல கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டும், நீர்கசிவு ஏற்பட்டு ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது.
இதனை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து காட்டெருமை, கரடி மற்றும் பாம்பு உட்பட விஷ பூச்சிக்களின் புகலிடமாக மாறியுள்ளது. நடைபாதை, வீட்டு வாசல்களில் மழை நீர் தேங்குகிறது. சில குடியிருப்புகள் முழுவதும் புதர்களால் மூடப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'நகராட்சி சார்பில் துாய்மை பணிகள் பெயரளவுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
நடைபாதை முழுவதும் பாசி படர்ந்து மக்கள் தவறி விழுகின்றனர். வீடுகளுக்குள் விஷ பூச்சிகள், பாம்புகளின் புகலிடமாக மாறி வருவது வாடிக்கையாக உள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆர்.டி.ஓ., குடியிருப்பை சுற்றியும் முட்புதர்கள் சூழ்ந்தும் கூட அகற்றப்படாமல் உள்ளது. பொதுப்பணி துறையினர் வீடுகளுக்கு பழுது பார்க்கும் பணிகளை மேற்கொண்டு, நடைபாதை, தடுப்பு சுவர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்,' என்றனர்.

