விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோகிபீடியாவை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோகிபீடியாவை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
ADDED : அக் 28, 2025 10:56 AM

வாஷிங்டன்: விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோகிபீடியா (GROKIPEDIA) எனும் வலைதளத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், கடந்த செப்.,29ம் தேதி க்ரோகிபீடியா பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், விக்கிபீடியாவுக்கு போட்டியாக இன்று க்ரோகிபீடியா வலைதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை மனிதர்களால் திருத்தம் செய்யவோ, மாற்றியமைக்கவோ முடியும். எனவே, அது சார்புடன் இருப்பதாக எலான் மஸ்க் உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வந்தனர்.
தற்போது, அதற்கு மாற்றாக, xAI நிறுவனத்தின் சார்பில் முழுக்க முழுக்க கிரோக் ஏஐ-யால் சரிபார்க்கப்பட்ட ஏஐ பதிவுகளை மட்டுமே கொண்ட வலைதளமாக க்ரோகிபீடியா உருவாக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது க்ரோகிபீடியா 0.1 வெர்சன் என்றும், இது பலமடங்கு சிறப்பானதாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாக, விக்கிப்பீடியாவை விட சிறப்பானது எனத் தெரிவித்துள்ளார்.
க்ரோகிபீடியாவில் இதுவரையில் பல்வேறு தலைப்புகளில் 8.85 லட்சம் கட்டுரைகள் பதிவிடப்பட்டுள்ளது.

