தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பெட்ரோல் கேன் வெடித்து மூவர் படுகாயம்

பெட்ரோல் கேன் வெடித்து மூவர் படுகாயம்

பெட்ரோல் கேன் வெடித்து மூவர் படுகாயம்


ADDED : செப் 16, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி அருகே, பெட்ரோல் கேன் வெடித்ததில், மூவர் காயமடைந்தனர்.

கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில், நேற்று முன்தினம் இரவு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது, பேண்டு வாத்தியத்தை சூடு செய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்ட நிலையில், அருகில் வைத்திருந்த பெட்ரோல் கேன் வெடித்து சிதறி, கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

இதில், அருகில் நின்றிருந்த பனக்கம்பை பகுதியை சேர்ந்த, சிவனேசன், 58, ராகுல், 26, மற்றும் சஞ்சய் ஹரிஹரன்,21, ஆகியோர் மீது நெருப்பு பரவியுள்ளது. அருகில் இருந்தவர்கள், தீயை அனைத்து , காயம் அடைந்த, மூவரையும் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதலி சிகிச்சைக்கு பின், மூவரும் ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோத்தகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us